பொது பூங்காவில் மது அருந்துவது, புகைபிடிப்பது கூடாது; சிலாங்கூர் அரசு தடை

பொது பூங்காவில் மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் வேப் புகைத்தல் போன்ற செயல்களை சிலாங்கூர் அரசு தடை செய்துள்ளது.

2005 பொது பூங்கா துணை சட்டங்களின் (Undang-undang Kecil Taman 2005) குற்றத்தில் இந்தத் தடை சேர்க்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் மது மற்றும் புகைபிடிப்பதை தடைசெய்த மலேசியாவின் முதல் மாநிலமாக பாக்காத்தான் தலைமையில் உள்ள சிலாங்கூர் மாநிலம் விளங்கும்.

பொது மக்களின் ஆரோக்கியத்திற்காக குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோயின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மலேசியர்களுக்கு ஒரு நடைமுறையாகவும் முன்னுரிமையாகவும் மாறி வருகிறது. விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மற்றும் குடும்ப நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விளையாட்டு மைதானங்கள், பொது மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.