மலேசிய அரசாங்கத்தை அதன் மக்கள் பொதுத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். டான் ஸ்ரீ முகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் மலேசிய அரசாங்கத்தின் தேர்தல் முறைக்கு எதிராக அமைந்துள்ளது.
முகிதீனின் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் விதிகளை மதிக்கவில்லை என்பதும் இப்போது தென்படுகிறது.
முதன்முறையாக, வேறொரு வேட்பாளர் இருப்பதால் ஒரு சபாநாயகர் நீக்கப்பட்டுள்ளார். அவ்வளவுதான். சபாநாயகர் எந்த தவறும் செய்யவில்லை. வேறொரு வேட்பாளர் இருக்கிறார் என்ற காரணத்திற்காக மட்டும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகரை நீக்கம் செய்ய இரண்டு வாக்கு பெரும்பான்மை மட்டுமே இருந்தது. இரண்டு பேர் மட்டுமே. பல வாக்குகள் இருந்திருந்தால் இந்த சபாநாயகரை பலர் நிராகரிக்கின்றனர் என கூறலாம்.
அவருக்கு பதிலாக வந்த சபாநாயகர், தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. அவராக ஒரு அங்கியை அணிந்து வந்து சபாநாயகராக செயல்படத் தொடங்கிவிட்டார்.
சபையின் உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்படவில்லை. பேசும் உரிமையும் வழங்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் விருப்பங்களை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருத்தல் வேண்டும்.
சபாநாயகரும் நிர்வகிக்கிறார். உறுப்பினர்களின் குரலை சபாநாயகர் நிறுத்துகிறார். செயலாளரை தலைப்பை படிக்க அழைக்கிறார். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உறுப்பினர்களின் கருத்துகள் புறக்கணிக்கப்படுகின்றன.
சபை இவ்வாறு இருக்குமானால், எதிர்க்கட்சி தேவையில்லையே. அரசாங்கத்தின் முன்மொழிவு எதுவாக இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும்.
நாடாளுமன்றம் எதற்கு? அரசாங்கம் மட்டும் போதும், அது பின் கதவு அரசாங்கமாக இருந்தாலும் கூட..
இவ்வாறு மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தன் கருத்தை கூறியுள்ளார்.