குளுவாங்கில் உள்ள ஒரு முதியோர் பராமரிப்பு மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 இன் புதிய திரளை, நாட்டில் தினசரி தொற்றுநோய்களின் எண்ணிக்கையை ஒரு மாதத்திற்குள் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.
சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம், நாட்டில் இன்று பதிவாகியுள்ள 21 புதிய பாதிப்புகளில், 13 பாதிப்புகள் குளுவாங்கில் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தில் இருந்து வந்தவை என்றார்.
இது கடந்த 30 நாட்களில் பதிவான மிக அதிகமான பாதிப்புகள் ஆகும். கடைசியாக நாடு இது போன்ற அல்லது இதைவிட அதிக எண்ணிக்கையை பதிவு செய்தது ஜூன் 20 அன்று ஆகும்.
இந்த முதியோர் இல்லத்தில் 13 புதிய பாதிப்புகளில், 12 பாதிப்புகள் மலேசியர்களும் மற்றும் ஒரு பாதிப்பு மலேசியர் அல்லாதவரும் சம்பந்தப்பட்டவை ஆகும்.
72 வயது நபர் ஜூலை 17 அன்று என்சே ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறந்த பின்பு இந்த புதிய திரளை கண்டறியப்பட்டதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். அவர் நேற்று கோவிட்-19 இன் பாதிப்பால் இறந்த 123வது நோயாளி என அறிவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 39 பேர் பரிசோணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் செயலில் உள்ள பாதிப்பு கண்காணிப்பு தொடங்கியது. அவர்களில் 14 பேர் பின்னர் கோவிட்-19க்கு நேர்மறையாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டனர் (நேற்றைய இறப்பு உட்பட). 18 எதிர்மறையும் மற்றும் ஏழு அவற்றின் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன என்றும் தெரிகிறது.
நேர்மறையானவர்களில் 14 பேரில் 11 பேர் மூத்த குடிமக்கள், ஒரு மைய ஊழியர் மற்றும் ஒரு குடும்ப உறுப்பினர் என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.