ஆகஸ்ட் 1 முதல் முகக்கவரி அணிவது கட்டாயமாக்கப்படுகிறது

ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து மற்றும் நெரிசலான பொது இடங்களில் முகக்கவரியின் பயன்பாடு கட்டாயமாக்கப்படுகிறது.

பொதுமக்கள் இந்த கட்டளைக்கு இணங்க தவறினால், சட்டம் 342 (தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988) இன் கீழ் RM1,000 அபராதம் விதிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் தொடர்பான அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அதிகரித்து வரும் புதிய திரளைகளைக் கருத்தில் கொண்டு, மலேசிய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனை படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.

தற்போது, எல்.ஆர்.டி, எம்.ஆர்.டி மற்றும் பேருந்துகள் போன்ற அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும், மற்றும் சந்தைகள் போன்ற நெரிசலான இடங்களில் மட்டுமே இந்த விதிகள் அமல்படுத்தப்படும் என்றார்.