அனைத்து 7 குற்றச்சாட்டுகளிலும் நஜிப் குற்றவாளி
அதிகார முறைகேடு, நம்பிக்கை மோசடி மற்றும் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான ஆர்.எம் 42 மில்லியன் நிதி பணமோசடி சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் நஜிப் ரசாக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தனது தீர்ப்பை வாசிக்கும் போது முன்னாள் பிரதமர் அமைதியாகவே காணப்பட்டார்.
அரசு தரப்பு குழு கொண்டு வந்த வழக்கு குறித்து நியாயமான சந்தேகங்களை எழுப்ப பாதுகாப்பு குழு தவறிவிட்டது என்று முகமட் நஸ்லான் கூறினார்.
இதன் காரணமாக, ஒரு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நஜிப் மீது அரசு தரப்பு வழக்குத் தொடர முடிந்தது என்றார் நீதிபதி.
3 சிபிடி குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான சந்தேகங்களை எழுப்ப நஜிப் தவறிவிட்டார்
மதியம் 12.12 : RM42 மில்லியனை தனது கணக்கில் மாற்றுவது தொடர்பான மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகத்தை எழுப்ப நஜிப் தவறிவிட்டார் என்று நீதிபதி கூறினார்.
மன்னர் அப்துல்லாவுக்கு நஜிப் ஒரு ‘நன்றி’ கடிதத்தை அனுப்பவில்லை
காலை 11.52: மன்னர் அப்துல்லாவிடமிருந்து RM2.6 பில்லியன் (அந்த நேரத்தில் அந்நிய செலாவணி வீதத்தின் அடிப்படையில்) பெற்றதாகக் கூறும் குற்றம் சாட்டப்பட்டவர் மன்னருக்கு எந்தவொரு “நன்றி” குறிப்பு/கடிதத்தையும் அனுப்பவில்லை என்று நீதிபதி கூறினார்.
நீதிபதி: ஜோ லோவினால் நஜிப் மோசடி செய்யப்பட்டார் என்று கூறுவது கடினம்
காலை 11.35 மணி: ஜோ லோ தனது பங்கை முழுமையாக புரிந்து கொண்டார் என்றும் அவர் நஜிப்பின் வங்கிக் கணக்கைக் கையாண்டார் என்பதில் சந்தேகமில்லை என்றும் நீதிபதி கூறினார்.
நஜிப், ஜோ லோவின் மோசடிக்கு பலியானார் என்று கூறுவது கடினமாக உள்ளது என்றார் நீதிபதி.
RM42 மில்லியன் திரும்பவில்லை: நஜிப் செயல்படவில்லை, நீதிபதி கூறினார்
காலை 11.25: எஸ்.ஆர்.சி-யின் RM42 மில்லியனை திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதி முகமட் நஸ்லான் கூறினார்.
இந்த நிதி எஸ்.ஆர்.சி-யிலிருந்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், சட்ட ரீதியில், நிதி அமைச்சராக அவர் அந்நிறுவனத்தின் உரிமையாளர் என்றும் நீதிபதி கூறினார்.
ஜோ லோ-வுடன் தொடர்பு என குற்றம் சாட்டப்பட்டது
காலை 11.15 மணி: ஆம்பேங்க் இஸ்லாமிய வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை குறித்து குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரியும் என்றும், ஆனால் அதை பற்றி அவர் வெளியிடவில்லை என்றும் நீதிபதி கூறினார்.
வங்கிக் கணக்குகள் குறித்து, ஜோ லோ மற்றும் நஜிப்பின் தலைமை செயலாளர் அஸ்லின் அலியாஸ் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றார் நீதிபதி.
நீதிபதி: அம்பேங்க் இஸ்லாம் எதிராக எஸ்.ஆர்.சி அல்லது நஜிப் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை
காலை 11.10 – எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் அம்பேங்க் இஸ்லாம் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று முகமட் நஸ்லான் குறிப்பிட்டார்.
“எந்தவொரு ஆட்சேபனை அல்லது எதிர்ப்பும் இல்லையேல், தவறு நடத்தைக்கான அறிகுறியும் இல்லை” என்று நீதிபதி கூறுகிறார்.
நீதிபதி: பாதுகாப்பு குழு நியாயமான சந்தேகங்களை எழுப்பத் தவறிவிட்டது
காலை 10.59: மலேசிய ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 23(1) இன் கீழ் அதிகாரத்தை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களை எழுப்ப பாதுகாப்பு குழு தவறிவிட்டது என்று நீதிபதி கூறினார்.
நீதிபதி: எஸ்.ஆர்.சிக்கு KWAP கடன் ‘அவசரமாக’ அங்கீகரிக்கப்பட்டது
காலை 10.30 மணி: எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனலுக்கு RM2 பில்லியன் Kumpulan Wang Persaraan (Diperbadankan) (KWAP) கடனை அமைச்சரவை ‘அவசரமாக’ ஒப்புதல் அளித்தது என்பதில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்று நீதிபதி கூறினார்.
அப்போது KWAP-க்கு பொறுப்பான நிதியமைச்சராக இருந்த நஜிப்பின் விண்ணப்பம் அமைப்பின் முதலீட்டுக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நீதிபதி கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் SRC உருவாக்கத்தில் சம்பந்தப்பட்டார்
காலை 10.20 மணி: எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல்/ SRC International Sdn Bhd.
உருவாக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்டிருப்பதாக நீதிபதி கூறினார்.
தீர்ப்பு தொடங்கின
காலை 10.18: நஜிப் மீதான RM42 மில்லியன் எஸ்.ஆர்.சி வழக்கில் நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தீர்ப்பை வழங்கத் தொடங்கினார்.
காலை 10.17: நீதிமன்றம் தொடங்கியது
உடல் வெப்பநிலையை சோதனை
காலை 10.11: ஆதரவாளர்கள் ஓய்வெடுக்க, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மற்றும் மசூதியின் வளாகத்தையும் எதிரே ஐந்து கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன. ஆதரவாளர்கள் உடல் வெப்பநிலையை சோதனை செய்து, பதிவு செய்ய வேண்டும்.
நியமிக்கப்பட்ட ஆதரவாளர் மற்ற ஆதரவாளரின் உடல் வெப்பநிலை மற்றும் நோய் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்று சோதித்து பார்க்கின்றனர்.
இது தவிர, அங்கு பாஸ் கட்சியின் அபு காசிம் மனாப் மற்றும் சில பாஸ் உறுப்பினர்களும் உள்ளனர்.
முன்னாள் பிரதமருக்கு வழங்கப்படும் தீர்ப்பு அரசியலுடன் கலக்கப்படாது என்று அவர் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
“நான் தலையீடு இல்லாத ஒரு நியாயமான வெற்றியை எதிர்பார்க்கிறேன். கடவுள் விருத்தில் பாஸ்கு/Bossku (நஜிப்) நன்றாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
நஜிப் நீதிமன்றத்தினுள் நுழைந்தார்
காலை 9.58: கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நஜிப் நுழைந்து பொது இருக்கைகளின் முன் வரிசையில் அமர்ந்திருக்கிறார்.
அம்னோ அதிபர் அகமட் ஜாஹிட் ஹமிடி அவருக்கு அருகில் அமர்ந்தார்.
காலை 9:50: இன்றைய முடிவு தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் என்று அம்னோ அடிமட்டத் தலைவர் ஜமால் யூனோஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
“இந்த வழக்கு நஜிப் ரசாக் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்படுவது மட்டுமல்லாமல், தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கும் தீர்ப்பு அளிக்கப்படுவதாக அமையும். “என்று அவர் கூறினார்.
‘பாஸ்கு’ என்ற கூச்சல் நஜிப்பை வரவேற்றது
காலை 9.26: நஜிப்பின் வருகை. “பாஸ்கு” என்ற கூச்சலுடனும், ஆதரவாளர்களின் வாழ்த்துக்களுடனும் நஜீப் வரவேற்கப்பட்டார்.
முன்னாள் பிரதமருடன் புகைப்படம் எடுக்க பலர் விரும்பியதால் நிலைமை மிகவும் நெரிசலானது.
பழுப்பு நிற உடை மற்றும் முகக்கவரி அணிந்திருந்த நஜிப், பின்னர் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசானுடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார்.
அகமட் மஸ்லான்: உண்மை நிலைநாட்டப்படும்
காலை 9.05: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவார் என்று அம்னோ பொதுச்செயலாளர் அகமட் மஸ்லான் நம்பிக்கை தெரிவித்தார்.
கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே சந்தித்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உண்மை நிலைநாட்டப்பட்டு, அவர் இன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறேன்.” என்றார்.
காலை 8.48: இன்று நல்ல வானிலை. முன்னாள் பிரதமரும் முன்னாள் அம்னோ தலைவருமான நஜிப்பின் ஆதரவாளர்கள் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் அணைபோல் திரண்டுள்ளனர்.
அவர்களில் சிலர் நேற்று முதல் கொண்டே இங்கே உள்ளனர்.
58 வயதான நோராசிஹான் என்று மட்டுமே அறிய விரும்பிய ஒரு ஆதரவாளர், அவருடைய கணவருடன் பகாங் மாநிலத்தில் உள்ள பெக்கானில் இருந்து இரவு 11 மணிக்கு பேருந்தில் ஏறியதாகக் கூறினார்.
இன்று காலை 6 மணி முதல் அவர்கள் நீதிமன்றத்தில் காத்திருந்தனர்.
நேற்று இரவு மொத்தம் ஆறு பேருந்துகள் பெக்கானில் இருந்து புறப்பட்டன என்றார்.
“பாஸ்கு” (“Bossku”) என்ற கூச்சல் நீதிமன்றத்தில் ஒலிப்பது கேட்டது.
சராசரியாக பெரும்பாலானோர் முகக்கவரிகளை அணிந்திருந்தனர். ஆனால் கூடல் இடைவெளியை அவர்கள் கடைபிடிக்கவில்லை.