நஜிப்பின் ஆதரவாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

அதிகார முறைகேடு செய்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் குற்றவியல் விசாரணையின் தீர்ப்பு மற்றும் 1எம்.டி.பி நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும். நஜிப்பின் ஆதரவாளர்கள் இன்று அதிகாலை முதல் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடிவருகின்றனர்.

நஜிப்பின் ஆதரவாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

பிற்பகல் 1.10 மணி – கோவிட்-19 எஸ்ஓபிகளைக் கடைப்பிடிக்குமாறு நஜிப்பின் ஆதரவாளர்களுக்கும் ஊடக உறுப்பினர்களுக்கும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று அந்த அரசியல்வாதிக்கு எதிரான குற்றவியல் தீர்ப்புகள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிபடுத்த நஜிப் ஆதரவாளர்கள் முன் வாயிலில் திரண்டனர்.

நஜிப்பின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கோஷமிடுகிறார்கள்

பிற்பகல் 1 மணி – முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சுமார் 200 ஆதரவாளர்கள் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் கூடியிருந்தனர்.

முன்னதாக நஜிப்பிற்கு எதிரான கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த ஆதரவாளர்கள், “ஹிடூப் பாஸ்கு” (“Hidup Bossku”) மற்றும் “லெபாஸ்கன் பாஸ்கு” (“Lepaskan Bossku”) என்று கோஷமிடத் தொடங்கினர். போஸ்கு (Bossku) என்பது நஜிப்பின் பிரபலமான புனைப்பெயர்.

“புபார், புபர், புபர் பார்லிமென்!” என்று கூச்சலிட்டதால், நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அரசாங்கத்திற்கு அவரது ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தனர்.