ஆயிரக்கணக்கானோர் நீதிமன்றத்தில் கூடியதைக் கண்டு நூர் ஹிஷாம் வருத்தம்

இன்று காலை கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் “சுய கட்டுப்பாடு இன்றி” அலட்சியமாக இருந்தது குறித்து சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

“ஒவ்வொரு நாளும் சுகாதார அமைச்சு மலேசியர்களை குறைந்தது 1 மீட்டர் பாதுகாப்பு கூடல் இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவரி அணிவது, அடிக்கடி கை கழுவுவது போன்ற எஸ்ஓபி-களுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.”

“சுய கட்டுப்பாடு இல்லாமல் இதுபோன்ற சூழ்நிலையைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது” என்று அவர் ட்விட்டரில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் நடந்த பேரணியைத் தொடர்ந்து புதிய கோவிட்-19 திரளை ஏற்படுவது பற்றிய கவலைகள் குறித்த செய்தி வெளியீட்டில் நூர் ஹிஷாம் இதனைக் கூறினார்.

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் (பி.கே.பி.பி) நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) புறக்கணித்தனர்.

சுகாதார எஸ்ஓபிக்கு இணங்குமாறு காவல்துறையினர் இறுதியாக ஆதரவாளர்களை எச்சரிக்கத் தொடங்கினர்.