கோவிட்-19: 13 புதிய பாதிப்புகள்

மொத்தம் 13 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றின் பாதிப்புகள் இன்று பிற்பகல் வரை பதிவாகியுள்ளன.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, செயலில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை அதாவது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிப்புகளின் எண்ணிக்கை 220 என்றும், இதுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,956 என்றும் கூறினார்.

“அறிவிக்கப்பட்ட 13 புதிய பாதிப்புகளில், எட்டு பாதிப்புகள் இறக்குமதி செய்யப்பட்டவை அதாவது வெளிநாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள். இதில் நான்கு மலேசியர் மற்றும் நான்கு மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டவை என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்” என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

எட்டு இறக்குமதி பாதிப்புகள் இங்கிலாந்தில் இருந்து வந்தவை (கோலாலம்பூரில் 2 பதிப்புகள்); இந்தியா (கோலாலம்பூரில் 2 பதிப்புகள்); பிலிப்பைன்ஸ் (கோலாலம்பூரில் 1 பதிப்பு); பாகிஸ்தான் (கோலாலம்பூரில் 1 பதிப்பு); காம்பியா (சிலாங்கூரில் 1 பதிப்பு); மற்றும் உக்ரேன் (சிலாங்கூரில் 1 பதிப்பு).

நாட்டில் ஏற்பட்ட ஐந்து தொற்று பாதிப்புகளில், மூன்று பாதிப்புகள் மலேசிய குடிமக்கள் மற்றும் இரண்டு பாதிப்புகள் மலேசிய குடிமக்கள் அல்லாதவை என்று அவர் கூறினார்.

மலேசிய குடிமக்களிடையே உள்நாட்டுப் பரவல் ஜோகூரில் ஒரு பாதிப்பையும் சரவாக் மற்றும் சபாவில் தலா ஒரு பாதிப்பையும் உள்ளடக்கி உள்ளது.

மலேசிய குடிமக்கள் அல்லாதவர்களிடையே உள்நாட்டு நோய்த்தொற்று பாதிப்புகளில் சரவாக் (2 பாதிப்புகள்) மற்றும் பெர்லிஸில் (ஒரு பாதிப்பு) ஆகியவை அடங்கும்.

மேலும், ஐந்து பாதிப்புகள் குணமடைந்துள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார். மொத்த குணமடைந்த பாதிப்புகள் 8,612 ஆகும்.

இன்று பிற்பகல் நிலவரப்படி, இரண்டு நேர்மறை கோவிட்-19 பாதிப்புகள் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றன. அதே நேரத்தில் ஒரு பாதிப்புக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

“கோவிட்-19 தொடர்பான இறப்புகளில் இன்று அதிகரிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, மலேசியாவில் கோவிட்-19 இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 124 ஆகவே உள்ளது (மொத்த பாதிப்புகளில் 1.38 சதவீதம்),” என்று அவர் கூறினார்.