நானா, முசாவா? மக்களே தீர்மானிக்கட்டும்!

ஷாஃபி அப்டால்: சட்டமன்றம் கலைக்கப்படும்! மாநில தேர்தல் நடத்தப்படும்!

சபா மாநிலத் தேர்தலை நடத்த ஏதுவாக மாநில சட்டமன்றத்தை கலைக்க மாநில ஆளுநர் (யாங் டி-பெர்துவா நெகேரி) ஜூஹர் மஹிருதீன் ஒப்புதல் அளித்துள்ளதாக சபா முதல்வர் ஷாஃபி அப்டால் அறிவித்தார்.

இன்று காலை நடந்த கூட்டத்தில் ஜுஹார் தனது சம்மதத்தை தெரிவித்ததாக ஷாஃபி கூறினார்.

“நேற்று மாநில சட்டமன்றத்தை கலைக்கக் கோரி விண்ணப்ப கடிதத்தை சமர்ப்பிக்க நான் மாநில ஆளுநரை சந்தித்தேன். இன்று காலை, அவர் சபையை கலைக்க ஒப்புக்கொண்டார்,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார், அதில் அவருக்கு ஆதரவளிக்கும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

“அவர்கள் அரண்மனைக்குச் செல்வதும், பதவியேற்க இங்கேயும் அங்கேயும் அலைவதும் ஒருபுறமிருக்க, சட்டமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.