இனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவா டெக் ஹோவை கட்சியிலிருந்து உடனடியாக நீக்கியதாக பி.கே.ஆர் தெரிவித்துள்ளது.
“சபாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையை பி.கே.அர். ஒழுங்கு வாரியம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. சபா மாநில அரசாங்கத்தை வீழ்த்த திட்டமிட்டுள்ள மூசா அமான் குழுவுடன் இனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவா டெக் ஹோ இருப்பதை நேற்று ஊடகங்கள் புகைப்படம் எடுத்தன.”
“சபா மாநில அரசாங்கத்தை கவிழ்க்க முற்படும் முகாமில் அவர் இருப்பதைப் பற்றி சபா மாநில தலைமைக் குழுவிலிருந்தும் உறுதிப்படுத்தல் கிடைத்தது. மக்கள் ஆணைக்கு துரோகம் இழைக்க அனுமதிக்கக் கூடாது என்ற பி.கே.ஆரின் நிலைப்பாட்டை கருத்தில் எடுத்துக் கொண்டு, கென்னி சுவா டெக் ஹோ பி.கே.ஆரிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டதாக ஒழுங்கு வாரியம் அறிவிக்கின்றது” என்று அவர் கூறினார்.
ஒரு முதல்வர் மாநில சட்டசபையின் நம்பிக்கையை இழக்கும்போது, சட்டமன்றத்தை கலைக்க சபா ஆளுநர் ஒப்புக் கொள்ளாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என்று சபா மாநில அரசியலமைப்பின் பிரிவு 7 கூறுகிறது.
முன்னதாக மூசாவின் போட்டியாளராக இருந்த இடைக்கால முதல்வர் ஷாஃபி அப்தால், சபா ஆளுநர் ஜூஹர் மஹிருதீன் மாநில சட்டசபையை கலைத்து, மக்களுக்கு ஆணையை திருப்பித் தர ஒப்புக் கொண்டதாக அறிவித்தார்.