சபா மாநில அரண்மனைக்குள் நுழைய மூசாவிற்கு தடை

முன்னாள் சபா முதல்வர் மூசா அமான் மற்றும் அவரது குழுவினர் சபா மாநில அரண்மனைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

அக்குழுவை சார்ந்த பத்து சொகுசு வாகனங்கள் இன்று பிற்பகல் 3.50 மணிக்கு ஜாலான் இஸ்தானாவின் அருகே காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.

மூசாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படும் பல வழக்கறிஞர்கள் சாலை தடையை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாக கூறப்படுகிறது, ஆனாலும் அவர்களால் காவல் தடைகளை கடக்க முடியவில்லை.

இன்று முன்னதாக லுயாங்கில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது மூசா, அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்கு பெரும்பான்மை இருப்பதாக அறிவித்து, சட்டமன்றம் கலைக்கப்படுவதாக சபா முதல்வர் ஷாஃபி அப்தாலின் அறிவிப்பு பொருத்தமற்றது என்று கூறினார்.