மலேசியாகினியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்!

மலேசியாகினி வாசகர்கள் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்!!!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இன்று தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின் மிக முக்கியமான நாட்களில் ஹஜ் பெருநாளும் ஒன்றாகும். அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இறைதூதரான இப்ராஹிம் நபி மற்றும் இஸ்மவேல் நபி ஆகியோரின் தியாகங்களை நினைவுகூரும் நாளாக அமைகிறது இந்த ஹஜ் தியாகத் திருநாள்.