2021 ஆம் ஆண்டிற்கான பள்ளி அமர்வு ஜனவரி 20 ஆம் தேதி தொடங்குகிறது

2021 ஆம் ஆண்டிற்கான நாடு தழுவிய பள்ளி ஆண்டின் முதல் தவணை ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும்.

ஆண்டு இறுதி தேர்வுகளின் ஒத்திவைப்பால் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டு இறுதி பள்ளி விடுமுறைகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

எஸ்பிஎம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வுகள் 2021 முதல் காலாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு பள்ளி தவணை தொடங்கும் முன்னர் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருப்பதால் 2021 ஆம் ஆண்டுக்கான பள்ளி அமர்வை முன்கூட்டியே அறிவிக்க முடியாது என்று ராட்ஸி கூறினார்.

இந்த ஆண்டு பள்ளி முடிவடையும் போது, இந்த ஆண்டிற்கான பாடங்கள் குறித்த குறைந்தபட்ச புரிதலை மாணவர்கள் பெற வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது என்றார் ராட்ஸி.