கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், கெடாவில் மற்றொரு புதிய திரளை

மலேசியா இன்று பிற்பகல் வரை மேலும் 15 புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்தது. புதிதாக மற்றொரு திரளையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, உள்நாட்டில் 11 தொற்று பாதிப்புகளில், மொத்தம் 10 பாதிப்புகள் குடிமக்கள் சம்பந்தப்பட்டவை என்றும் அதில் ஒன்பது பாதிப்புகள் கெடாவில் உள்ள “தாவார்” திரளையிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது.

கோலாலம்பூரில் உள்ள ஒரு மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு மலேசியர் சம்பந்தப்பட்ட மற்றொரு பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதற்கிடையில், வெளிநாட்டிற்கு புறப்படுவதற்கு முன்னர் பரிசோதிக்கப்பட்ட ஒரு வெளிநாட்டவர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று பாதிப்பும் பதிவு செய்யப்பட்டது.

கூடுதலாக, நான்கு கோவிட்-19 இறக்குமதி பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்தோனேசியாவிலிருந்து திரும்பி வந்த மலேசியர்கள் தொடர்பான மூன்று பாதிப்புகளும், யேமானில் இருந்து திரும்பிய ஒரு மலேசியர் சம்பந்தப்பட்ட பாதிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது, மொத்தம் 183 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் எந்த நோயாளிக்கும் சுவாச உதவி தேவையில்லை.

தாவார் திரளை

தாவார் திரளையின் முதல் பாதிப்பு மலேசிய குடிமக்களான 9,113வது நோயாளி ஆவார்.

ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் தனது குடும்ப உறுப்பினர் இறந்ததை நினைவுகூரும் வகையில் அவர் மத சடங்குகளில் கலந்து கொண்டார். அதில் மொத்தம் 30 பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளி ஆகஸ்ட் 8 ஆம் தேதி மார்பு வலி மற்றும் காய்ச்சலை அனுபவிக்கத் தொடங்கினார். அவர் ஒரு மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று, ஆகஸ்ட் 11 அன்று கோவிட்-19 க்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்டார்.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்த திரளையில் உள்ள அனைத்து பாதிப்புகளும் நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் ஆவர்.

இன்றுவரை, குடும்ப உறுப்பினர்கள், மருத்துவமனை தொடர்புகள் மற்றும் பிற தொடர்புகள் உட்பட 86 தொடர்புகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அந்த எண்ணிக்கையில், 56 பேர் இன்னும் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.