கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான மேலும் ஏழு புதிய பாதிப்புகள் இன்று பிற்பகல் வரை பதிவாகியுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கையில், மூன்று உள்நாட்டு பாதிப்புகள் மற்றும் நான்கு இறக்குமதி பாதிப்புகள் அடங்கியுள்ளன.
கெடாவில் பதிவு செய்யப்பட்ட மலேசியர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று பாதிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:
சாலா திரளை – இரண்டு பாதிப்புகள்.
தாவார் திரளை – ஒரு பாதிப்பு.
“குடும்ப உறுப்பினர்களிடையே கூடிய கூட்டங்களின் போது நிர்ணயிக்கப்பட்ட இயக்க முறைமைகளுக்கு (எஸ்ஓபி) முழுமையாக இணங்காததால் தாவார் திரளை நோய்த்தொற்று பரவியுள்ளது.” என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
“சாலா திரளையைப் பொறுத்தவரை, குறியீட்டு நோயாளி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு மருத்துவமனையில் உள்ள நோயாளியை பார்வையிட்ட வரலாற்றைக் கொண்டுள்ளார்.”
“மருத்துவமனையில் கோவிட்-19 இன் நேர்மறையான பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும், குறியீட்டு நோயாளியுடன் மருத்துவமனைக்குச் சென்ற அனைத்து குடும்ப உறுப்பினர்களும் நேர்மறையாகக் கண்டறியப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
இதனால் குறியீட்டு நோயாளியின் நெருங்கிய தொடர்புகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய் பரவியுள்ளது என்றார்.
நான்கு இறக்குமதி பாதிப்புகளின் விவரங்கள்:
வங்கதேசம் – கோலாலம்பூரில் கண்டறியப்பட்ட மூன்று பாதிப்புகள்
இங்கிலாந்து – கோலாலம்பூரில் கண்டறியப்பட்ட ஒரு பாதிப்பு.
கோவிட்-19 நோய்த்தொற்றுடன் சிகிச்சையில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 192 ஆகவும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9219 ஆகவும் உள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
கோவிட்-19 தொடர்பான இறப்புகளில் இன்று அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் மொத்தம் 26 பாதிப்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
இருப்பினும், எட்டு நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளனர். அவர்களில் இருவருக்குசுவாச உதவி தேவைப்படுகிறது.