தோட்டத் தொழில் மற்றும் மூலத் தொழில் அமைச்சர் டாக்டர் முகமட் கைருதீன் அமான் ரசாலியின் மூலம் நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஏற்படலாம் என்றும், அதனால் புதிய திரளையை ஏற்படக்கூடும் என்றும் செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் கூறினார்.
ஜூலை 7 ஆம் தேதி துருக்கியில் இருந்து திரும்பிய பின்னர், கைருதீன் சுய தனிமைப்படுத்தலுக்கான கோவிட்-19-ன் நிலையான இயக்க நடைமுறையுடன் (எஸ்ஓபி) இணங்கவில்லை என்று அந்த டிஏபி உறுப்பினர் கூறினார்.
“கைருதீன் துருக்கியில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் மலேசியாவில் ஒரு ‘கைருதீன் திரளையை’ உருவாக்கி, இதனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா கிருமி பரவ வாய்ப்புள்ளது” என்று அவர் இன்று ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விஷயத்தை முதலில் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கோக், துருக்கியின் விஜயத்தில் பங்கேற்ற கைருதீனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்ட எஸ்ஓபிக்கு உட்பட்டார்களா என்ற கேள்வியையும் எழுப்பினர்.
“அமைச்சரின் துருக்கி பயணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் இருந்தனர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.”
“அவர்களும் அரசாங்கத்தால் நிர்ணநிக்கப்பட்ட எஸ்ஓபி-யின் படி 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகிறார்களா?” என்று கேள்வி. எழுப்பினார் தெரேசா.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விளக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை கைருதீன் வெளியிடவில்லை. இந்த விவகாரம் குறித்து மலேசிய சுகாதார அமைச்சின் அறிக்கைக்காக காத்திருக்குமாறு கைருதீன் நேற்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
கைருதீனின் துருக்கி பயணத்தின் போது, அந்நாடு 18,000க்கும் மேற்பட்ட செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்திருந்தது.
இதற்கிடையில், துருக்கியில் இருந்து திரும்பிய பின்னர் கைருதீன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளையும் கோக் தனது ஊடக அறிக்கையில் பட்டியலிட்டார்.
துருக்கியில் இருந்து நாடு திரும்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு கைருதீன் அதிகாரப்பூர்வ விழாவில் கலந்து கொள்ளத் தொடங்கினார் என்று கோக் விளக்கினார்.
எனவே, கோவிட்-19 பாதிப்பு அமலாக்க அடிப்படையில் அரசாங்கம் பாராபட்சம் காட்ட வேண்டும் என்று கோக் கூறினார்.