தனது 22 மாத நிர்வாகத்தின் போது பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் RM6.61 பில்லியன் மதிப்புள்ள 101 திட்டங்களின் முழு பட்டியலையும் வெளியிடுமாறு நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸுக்கு இன்று டாக்டர் மகாதிர் முகமட் சவால் விடுத்தார்.
ஜாஃப்ருலிடம் அதைப் பெற்றவர்களின் பெயர்கள் உள்ளிட்ட திட்டங்களின் பட்டியலை முன்னாள் பிரதமர் மகாதீர் வெளியிடச் சொன்னார்.
“தெங்கு ஜஃப்ருல் அந்த திட்டங்களை விரிவாக பட்டியலிடவில்லை.”
“வெளிப்படைத்தன்மை கொள்கை நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, அந்த திட்டங்களின் பட்டியலையும், அதனைப் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பெயர்களையும் அறிவிக்கப்பட வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.”
“இந்த விஷயத்தில் நிதியமைச்சரின் நேர்மை தன்மை மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் முழு தகவல்களையும் பெற மக்களுக்கு உரிமை உண்டு” என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
நேற்று, தெங்கு ஜஃப்ருல் நாடாளுமன்றத்தில் பேசியபோது, முன்னாள் பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கீழ் நேரடி வழங்குதல் மூலம் RM6.61 பில்லியன் மதிப்புள்ள 101 திட்டங்களுக்கு நிதி அமைச்சு ஒப்புதல் அளித்ததாகக் கூறினார்.
பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் மஸ்லானின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இருப்பினும், சஃப்ருல் அது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
முன்னதாக இன்று, முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்கும் இதேபோன்ற அழைப்பை ஜாஃப்ருலுக்கு விடுத்தார்.