தேசிய வகை சுபாங் சீனப்பள்ளி தனது மாணவர்களில் ஒருவர் கோவிட்-19 பாதிப்புக்கு நேர்மறையாக சோதனை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதில், இரண்டாம் வகுப்பு மாணவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை பள்ளித் தலைவர் உறுதிப்படுத்தியதாக சீனா பிரஸ் மேற்கோளிட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அம்மாணவர் கிழக்கு மலேசியாவுக்குச் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது.
தற்போது அம்மாணவர் சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளி திறக்கப்பட வேண்டுமா அல்லது மூடப்பட வேண்டுமா என்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்காக பள்ளி காத்திருப்பதாக கூறப்படுகிறது.
அப்பள்ளி செவ்வாய் கிழமையும் சிறப்பு விடுமுறையை வழங்கியுள்ளது. பள்ளி புதன்கிழமை திறக்கப்படும்.
இதற்கிடையில், பள்ளி கிருமி நீக்கம் செய்யப்படும். மேலும் நெருங்கிய தொடர்பு பட்டியல் சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விடுமுறை நாளுடன் இணைந்து வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே கவனித்துக் கொள்ளும்படி பெற்றோரை வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.