10,945 வாக்குகள் பெற்று ஸ்லிம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது பாரிசான்
பெஜுவாங் வேட்பாளர் டெபாசிட் பணத்தை இழக்கவில்லை.
இரவு 9.30 மணி – புதிதாக அமைக்கப்பட்ட பெஜுவாங் கட்சி ஸ்லிம் இடைத்தேர்தலில் அதன் வேட்பாளர் அமீர் குஷைரி தோல்வியடைந்த போதிலும் அதன் வைப்புத்தொகையை இழக்கவில்லை.
அக்கட்சி 13.69 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது தேர்தல் வைப்புத்தொகையை மீட்டெடுக்க தேவையான 12.5 சதவீதத்தை விட அதிகமாகும்.
இதற்கிடையில், சுயேட்சை வேட்பாளர் எஸ்.சந்தரசேகரன் 1.79 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று, 5 ஆயிரம் வெள்ளி வைப்புத்தொகையை (டெபாசிட்டை) இழந்தார்.
இரவு 9.05 மணி – பாரிசான் வேட்பாளர் முகமட் ஜைதி அஜீஸ் ஸ்லிம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜைடி 10,945 வாக்குகள் விச்சியாசத்தில் வெற்றி பெற்றார். இது 14வது பொதுத்தேர்தலில் பாரிசான் வெற்றியை விட 2,183 வாக்குகள் அதிகமாகும்.
இந்த இடைத்தேர்தலில் ஜைதிக்கு 13,060 வாக்குகளும், அமீர் கியூஷைரிக்கு 2,115 வாக்குகளும், எஸ்.சந்தசேகரனுக்கு 276 வாக்குகளும் கிடைத்தன.
இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 68.4 சதவீதம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரவு 9.00 மணி – அம்னோ முன்னணி தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி போன்ற துணைத் தலைவர் முகமது ஹாசன்; துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி, பேராக் அம்னோ தொடர்புத் தலைவர் சராணி முகமட் மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் பாரிசான் வேட்பாளர் முகமட் ஜைதியுடன் ஸ்ரீ தஞ்ஜோங் மண்டபத்தில் காணப்பட்டனர்.
சீன, இந்திய வாக்காளர்கள் திசை மாறியுள்ளனர்
இரவு 8.30 மணி – 2018ல் பாரிசானை நிராகரித்த சீன மற்றும் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை இந்த முறை திசை மாறியுள்ளன.
பெரும்பான்மையான இந்திய வாக்காளர்கள் (83.56 சதவீதம்) உள்ள லாடாங் சுங்கையில் இது தெளிவாகக் காணப்பட்டது.
2018 ஆம் ஆண்டில், அங்குள்ள 70.35 சதவீத வாக்காளர்கள் பாக்காத்தான் வேட்பாளரை ஆதரித்தனர். ஆனால் இந்த முறை மொத்தம் 68.26 சதவீத வாக்காளர்கள் பாரிசான் வேட்பாளரை தேர்வு செய்துள்ளனர்.
இதற்கிடையில், சுங்கை ஸ்லிம் உத்தாரா பகுதியின் முடிவுகள் சீன வாக்காளர்களிடையே இதேபோன்ற ஆதரவை பெற்றிருப்பதைக் குறிக்கின்றன.
இரவு 7.35 – அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கையின் அடிப்படையில், 2018 பொதுத்தேர்தலில் பாஸ் மற்றும் அம்னோவின் ஒருங்கிணைந்த வாக்குகளுடன் ஒப்பிடும்போது இம்முறை பாரிசான் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது.
எண்ணிக்கையின்படி, இந்த முறை பாரிசான் 84.37 சதவீத வாக்குகளைப் பெற்றது, அதே நேரத்தில் கடந்த பொதுத்தேர்தலில் அம்னோ மற்றும் பாஸ் வென்ற வாக்குகளின் மொத்த சேர்க்கை 66.9 சதவீதமாகும்.
இரவு 7.05 – அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கையின்படி, பாரிசான் 9,980 வாக்குகளைப் பெற்று ஸ்லிம் இடைத்தேர்தலில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
சுமார் 73 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளதால், பாரிசான் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கையை கடந்துவிட்டது என கூறப்படுகிறது.
பெஜுவாங் வேட்பாளர் அமீர் குஸ்யாரி 13.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவர் 12.5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றால், வைப்புத்தொகையை இழந்திருப்பார்.
இரவு 7.00 மணி – அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கையின்படி, பாரிசான் 5,173 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமற்ற ஆரம்ப வாக்கு எண்ணிக்கையின்படி, 2018 இல் பாரிசான் கட்சியால் பெறப்பட்ட 80 சதவீதத்துடன் ஒப்பிடும்போது இம்முறை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 95 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெஜுவாங் வேட்பாளர் ஆரம்ப வாக்குகளில் 4.37 சதவீதத்தைப் பெற்றுள்ளார். இது 2018 ஆம் ஆண்டில் பாக்காத்தான் வேட்பாளர் பெற்றதைப் போலவே உள்ளது.
பாரிசான் வேட்பாளர் 1,000க்கும் மேற்பட்ட வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
மாலை 6.45 மணி – வாக்குச் சாவடியிலிருந்து அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கையின் அடிப்படையில், பாரிசானைச் சேர்ந்த முகமட் ஜைதி அஜீஸ் 1,000க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றுள்ளார். 389 வாக்குகளைப் பெற்ற அமீர் குஸ்யாயிரியுடன் ஒப்பிடும்போது அவருக்கு இப்போது 1,500 வாக்குகளும், மற்றொரு சுயேட்சை வேட்பாளர் எஸ்.சந்தசேகரனுக்கு 65 வாக்குகளும் கிடைத்துள்ளன.
மாலை 5 மணி – பேராக்கில் உள்ள N58 ஸ்லிம் தொகுதிக்கான வாக்குப்பதிவு நிறைவடைகிறது, விரைவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
பாரிசான் வேட்பாளர், முகமட் ஜைதி அஜீஸ், தன் கட்சியின் கோட்டையை பாதுகாக்க போட்டியிடுகிறார். அவருக்கு சுயேட்சை வேட்பாளர்களான அமீர் குஸ்யாரி முகமது தனுசி மற்றும் எஸ்.சந்தரசேகரன் ஆகியோர் சவால் விடுத்துள்ளனர்.
ஷரியா வழக்கறிஞரான அமீர் குஸ்யாரி ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டாலும், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் நிறுவிய பார்ட்டி பெஜுவாங் தனா ஆயேர் (பெஜுவாங்) எனும் புதிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.