அம்னோ தலைவர், இளைஞர் பிரிவு தலைவர் பி.என் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை

தேசிய கூட்டணி நிர்வாகத்தின் (பி.என்) அரை ஆண்டு மாநாடு இன்று கோலாலம்பூரில் நடந்தது.

பெர்சத்து தலைவரான பிரதமர் முகிதீன் யாசின், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அதில் உரை நிகழ்த்தினர்.

விழாவில் பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அகமட் பாஹிசால் வான் அகமது கமால் மற்றும் பாஸ் இளைஞர் பிரிவு தலைவர் கைரில் நிஜாம் கிருதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இருப்பினும், இன்று இரவு உரையாற்றவிருந்த அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் அம்னோ இளைஞர் பிரிவு தலைவருமான டாக்டர் அசிராஃப் வாஜ்தி டுசுகி ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

மாநாட்டில் ஜாஹிட் மற்றும் அசிராஃப் இல்லாதது கேள்விகளை எழுப்பியுள்ளது.

அம்னோ பிரதிநிதிகளும் இன்று இரவு மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.