சிலாங்கூரில் நீர் குழாய்கள் வறண்ட போக ஆரம்பித்திருந்தாலும், சிறப்பு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படும் வி.ஐ.பி.க்கள் மேல் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
அப்படியான வி.ஐ.பி-களில் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி மற்றும் அவரது குடும்பத்தினர் அடங்கியுள்ளனர். அவரது மனைவி தனது வீட்டின் முன் நிருத்தப்பட்ட சிலாங்கூர் நீர் லாரியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். “தண்ணீர் அனுப்பிய ஆயேர் சிலாங்கூருக்கு நன்றி. நீங்கள் இப்போது ஒரு முன் வரிசை ஊழியர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். கடவுள் ஆசீர்வதிப்பாராக” என்று படத்தின் தலைப்பில் அமிருதின் ஷாரியின் மனைவி மஸ்டியானா எழுதியிருந்தார். நேற்று மஸ்டியானாவின் இன்ஸ்டாகிராமில் மற்றொரு படமும் இருந்தது. அதில் “தண்ணீர் இல்லாதபோது” என்ற தலைப்பில் தனது பிள்ளைகள் தங்கள் வீட்டு நீச்சல் குளத்தில் நீந்துவதைக் காட்டியது.
பல மத்திய அமைச்சர்களும் இதேபோன்ற சலுகையைப் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாட்டில் தண்ணீரை வாங்கும் அல்லது தண்ணீர் பெற காத்திருக்கும் சிலாங்கூர் மக்களைப் போலல்லாமல், அமிருதீனின் மனைவி மஸ்தியானாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் பரவியுள்ளன.
மஸ்டியானாவின் படம் குறித்து கருத்துக்களை வெளியிட்ட பொதுமக்கள், பொதுக் குழாய்கள் அல்லது தண்ணீர் லாரிகளில் இருந்து தண்ணீரைப் பெறுவதற்காக சாலையின் ஓரத்தில் வரிசையில் நிற்பவர்களின் படங்களை பதிவேற்றம் செய்தனர்.
ஆயேர் சிலாங்கூரை தொடர்பு கொண்டபோது அது அமிருதினின் இல்லத்திற்கு ஒரு தண்ணீர் லாரியை அனுப்பியதை உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில், செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோவும் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்ததோடு, சில அமைச்சர்கள் சிறப்பு சிகிச்சை பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
“புக்கிட் டாமான்சாராவில் உள்ள அமைச்சர்களின் வீடுகள், தண்ணீர் லாரிக்காக அங்குள்ள மற்ற குடியிருப்பாளர்களின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”
“அங்குள்ள சாலைகளின் வரிசை முறையை நீர் லாரி பின்பற்றட்டும். உங்கள் முறைக்கு காத்திருங்கள்,” என்று பிரதமர் முகிதீன் யாசின் வசிப்பிடத்தையும் உள்ளடக்கிய பகுதியையும் ஹன்னா யோ குறிப்பிடுவதாக தெரிகிறது.