08.09.2020 பிற்பகல் நிலவரப்படி, மலேசியாவில் மேலும் 100 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மூன்று மாதங்களில் மிக உயர்ந்த அதிகரிப்பு ஆகும்.
இன்று அறிவிக்கப்பட்ட புதிய பாதிப்புகளில் 85 உள்ளூர் பாதிப்புகள் மற்றும் 15 இறக்குமதி செய்யப்பட்ட பாதிப்புகள் என்று மலேசியா சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
பதினைந்து இறக்குமதி பாதிப்புகளில் இரண்டு மலேசியர் மற்றும் 13 மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டனர். இது (இந்தியாவில் இருந்து வந்த) சிலாங்கூரில் ஆறு பாதிப்புகள், கோலாலம்பூரில் நான்கு பாதிப்புகள், நெகேரி செம்பிலனில் ஒரு பாதிப்பு மற்றும் இந்தோனேசியாவிலிருந்து இரண்டு பாதிப்புகள் சிலாங்கூரில் கண்டறியப்பட்டுள்ளன.
“85 உள்ளூர் தொற்றுநோய்களில் 55 மலேசியர் மற்றும் 30 மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
“பாதிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு – சபா, பெந்தேங் திரளையிலிருந்து (62 பாதிப்புகள்).
“கெடா, சுங்கை திரளையிலிருந்து (22 பாதிப்புகள்) மற்றும் சுங்கை திரளையிலிருந்து பெர்லிஸ் (ஒரு பாதிப்பு)” என்று புத்ராஜெயாவில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இது, நாட்டில் கோவிட்-19 பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 9,559 அடைந்ததுள்ளதாகக் கூறினார். 295 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவிட்-19 தொடர்பான இறப்புகளில் இன்று அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆக, மலேசியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 128 அல்லது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையில் 1.34 சதவீதமாக உள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) ஏழு நேர்மறையான பாதிப்புகள் உள்ளன. அதில் நான்கு பாதிப்புகளுக்கு சுவாச உதவி தேவைப்படுவதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.