கோவிட்-19: 24 புதிய பாதிப்புகள், சிகிச்சையில் 300க்கும் அதிகமான பாதிப்புகள்!

கோவிட்-19 செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 300க்கும் மேல் அதிகரித்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 322 என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று மதியம் நிலவரப்படி, 24 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“நாட்டில் ஏற்பட்ட 18 பாதிப்புகளில், 16 மலேசியர் மற்றும் இரண்டு மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் ” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கெடா 16 புதிய பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. அங்கு, சுங்கை திரளையிலிருந்து 13 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தாவார் திரளையிலிருந்து ஒரு பாதிப்பு; தெலாகா திரளையிலிருந்து ஒரு பாதிப்பு; சுல்தானா பஹியா மருத்துவமனையில் ஒரு பாதிப்பு, மற்றும் சபா பெந்தேங் திரளையிலிருந்து இரண்டு பாதிப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள ஆறு இறக்குமதி பாதிப்புகளில் மூன்று மலேசியர் மற்றும் மூன்று மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இறக்குமதி பாதிப்புகள் பங்களாதேஷ் (2), சீனா (1), இந்தோனேசியா (1), சிங்கப்பூர் (1) மற்றும் தென் கொரியா (1) ஆகிய நாடுகளிலிருந்து திரும்பியவர்களை உள்ளடக்கியுள்ளன.

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த நுழைவு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கு முன்பு மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட இறக்குமதி பாதிப்புகள் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளன என நம்பப்படுகிறது.

“செப்டம்பர் 6 ஆம் தேதி பங்களாதேஷில் இருந்து இரண்டு பாதிப்புகள் மலேசியா வந்து அதே நாளில் சோதிக்கப்பட்டன. அதே நேரத்தில் சீனாவிலிருந்து ஒரு பாதிப்பு செப்டம்பர் 5 ஆம் தேதி மலேசியா வந்து செப்டம்பர் 6 ஆம் தேதி சோதிக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சபாவில், கடந்த இரண்டு நாட்களில் கோவிட்-19 பாதிப்புகளை அதிகமாக பதிவாக்கிய லாஹாட் டத்து பெந்தேங் திரளையில் இருந்து இரண்டு புதிய பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

இதனால் லாஹாட் டத்து பெந்தேங் திரளையில் மொத்தம் 130 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) ஏழு நேர்மறையான பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். இதில் சுவாச உதவி தேவைப்படும் நான்கு பாதிப்புகள் உள்ளன. இன்று கோவிட்-19 தொடர்பான இறப்புகளில் அதிகரிப்பு ஏதும் இல்லை. கோவிட்-19 பாதிப்பால் இன்றுவரை மொத்தம் 128 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.