அம்னோ வேட்பாளர்களின் பட்டியல்

சபா தேர்தல்: பாரிசான் வேட்பாளர்களின் பட்டியலை சபா அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் புங் மொக்தார் ராடின் இன்று கோத்தா கினாபாலுவில் அறிவித்தார்.

73 மாநில சட்டமன்ற (DUN) இடங்களில் அம்னோ 31 இடங்களில் போட்டியிடும்.

இருப்பினும், மூசா அமானுக்கு மாநிலத் தேர்தலில் இடம் வழங்கப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் எந்த இடத்தையும் கேட்கவில்லை என்று புங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.

மூசா, இதற்கு முன்பு 1994 ஆம் ஆண்டு முதல், அம்னோ மற்றும் பாரிசான் டிக்கெட்டுகளில் சுங்கை சிபுகா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

கடந்த ஜூலை மாதம், வாரிசான் தலைமையிலான அரசாங்கத்தை கைப்பற்ற போதுமான பெரும்பான்மை இருப்பதாக மூசா அறிவித்தார்.

இருப்பினும், மாநில முதல்வர் ஷாஃபி அப்டால், மாநில சட்டசபையை கலைக்க மாநில ஆளுநருக்கு அறிவுறுத்தினார்.

அம்னோ வேட்பாளர்களின் பட்டியல்: