சபா தேர்தல்!

சபா மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது.

மாலை 5.45 மணி: சூக்கிற்கான போட்டி கடுமையாக உள்ளது. அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கையின்படி, பி.கே.ஆரின் ரேமண்ட் அஹுவார் 234 வாக்குகளைப் பெற்றுள்ளார், அதைத் தொடர்ந்து ஸ்டாரின் எல்ரான் ஆங்கின் 228 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சூக் பிஎன்-பிபிஆர்எஸ்-க்கு நீண்ட கால தொகுதி ஆகும். ஸ்டார் அல்லது பி.கே.ஆர் வேட்பாளர் வெற்றி பெற்றால், இது பாரிசானுக்கு ஒரு பெரிய ஏமாற்றமாகக் கருதப்படும்.

ஆரம்ப எண்ணிக்கை டி.ஏ.பி-க்கு மோசமானதாகத் தோன்றுகிறது

மாலை 5.40 மணி: தேர்தலில் முதன்முறையாக வாரிசன் சின்னத்தைப் பயன்படுத்தும் டிஏபி, ஆரம்ப எண்ணிக்கையின் படி சிறப்பாக செயல்படவில்லை என தெரிகிறது.

லுயாங், கபாயன், எலோபுரா, டான்ஜோங் பாபாட் மற்றும் ஸ்ரீ டான்ஜோங் ஆகிய இடங்களில் கட்சி பின்தங்கியிருக்கிறது.

2018 பொதுத் தேர்தலின் போது, டிஏபி மேற்கண்ட ஐந்து இடங்களை மிகப் பெரிய வித்தியாசத்தில் வென்றது.

மாலை 5.30 மணி: எம்.சி.ஏ-வின் லு யென் டிங் கபயன் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

வரலாற்று ரீதியாக, எம்.சி.ஏ இதற்கு முன்பு சபாவில் ஒரு இடத்தையும் வென்றதில்லை. முத்ன் முறையாக அவர்கள் சபாவில் காலடி வைப்பார்களா?

பிபிஎஸ்ஸின் ஜோனிஸ்டன் உப்கோ தலைவரை விட முன்னேறியுள்ளார்

மாலை 5.20 மணி: பிபிஎஸ் தகவல் தலைவரும், தற்போதைய கியுலு சட்டமன்ற உறுப்பினருமான ஜொனிஸ்டன் பாங்குவாய், கினாபாலு முற்போக்கு கட்சியின் (உப்கோ) தலைவர் வில்பிரட் மடியஸ் டாங்காவை விட அதிக எண்ணிக்கையின் முன்னிலை வகிக்கிறார்.

எஸ்.கே.தாங்கினம்பூர் மற்றும் எஸ்.கே.போரிங் வாக்கு மையங்களில் இதுவரை கணக்கிடப்பட்ட 73 சதவீத வாக்குகளை ஜோனிஸ்டன் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது

மாலை 5 மணி: தற்போதைய முதலமைச்சர் ஷாஃபி அப்தாலின் வாரீசன் பிளஸ் கூட்டணி சபா மாநில அரசாங்கத்தை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது புதிய நிர்வாகம் பொறுப்பேற்குமா என்பதை தீர்மானிக்க 73 இடங்களுக்கான எண்ணிக்கை தொடங்குகிறது.

வாக்குப்பதிவு சற்று அதிகரித்தது

பிற்பகல் 3.50 மணி: இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, பதிவுசெய்யப்பட்ட 1.1 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களில் 58 சதவீதம் பேர் தங்களின் கடமையை செய்துள்ளதாக தேர்தல் ஆணைய தரவு காட்டுகிறது.

பிற்பகல் 2 மணிக்கு தரவை விட இந்த எண்ணிக்கை 4 சதவீதம் அதிகமாக இருந்தது.

பிற்பகல் 1 மணி: இன்று நண்பகல் நிலவரப்படி 41 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் (இ.சி). அறிவித்துள்ளது.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 70 முதல் 75 சதவீதம் வரை இன்று வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது என்று முன்னதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கானி சல்லேஹ் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 பரவலைத் தடுக்க வாக்காளர்கள் எஸ்ஓபிக்கு இணங்கி வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கி சபாவில் சுமார் 1.12 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அந்தந்த தொகுதிகளில் தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் நாள் ஆகும்.

அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் மீண்டும் இணைந்துள்ள சமயத்தில் சபா தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. வரும் 15-வது பொதுத்தேர்தலையும் நாட்டின் அரசியல் நிலையையும் பாதிக்கும் ஒரு முக்கியமான அம்சமாக இந்த தேர்தல் அமையும்.

இதில் 73 இடங்களுக்கு 447 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.