சபா தேர்தலில், பீத்தாஸ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் சுபியான் அப்துல் காரிம், கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முகநூலில் பதிவிட்ட சுபியான், தேர்தலில் தமக்கு உதவிய வாக்காளர்கள், ஊழியர்கள், இயந்திரங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோருடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
“தேசிய முன்னணியின் பிதாஸ் தொகுதி என்03 வேட்பாளரான நான் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளேன். இதை எதிர்கொள்ள எனக்கு வலிமை கொடுக்கவும், உடனடியாக குணமடைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுங்கள். தயவுசெய்து என்னுடன் இருந்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் ரஸ்லான் ராபி மற்றும் அம்னோ தகவல் தலைவர் ஷாரில் சுபியான் ஹம்டான் ஆகியோர் சபாவிலிருந்து திரும்பியபோது கொவிட்-19 நோய்க்கு சாதகமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டனர்.
N03 பீத்தாஸ் தொகுதி வாரிசான் (Warisan), பாரிசான் (Barisan), பார்ட்டி சிந்தா சபா (பிசிஎஸ்) (Parti Cinta Sabah (PCS), பார்ட்டி பெர்டுபுஹான் கெபாங்சாஆன் பெர்சத்து சபா (உஸ்னோ) (Parti Pertubuhan Kebangsaan Bersatu Sabah (Usno)) மற்றும் சுயேட்சை வேட்பாளர்களிடையே, ஐந்து முனை போட்டி நிலவுகிறது.