சபா தேர்தலில் ஜி.ஆர்.எஸ் வெற்றி பெறுகிறது என்று ஹம்சா தெரிவித்தார்

சபா மாநிலத் தேர்தலில் காபுங்கான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) வெற்றி பெறுகிறது என்று ஹம்சா ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அனைத்து முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் வரை தாங்கள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று அந்த பெர்சத்து பொதுச்செயலாளர் கூறினார்.

“ஆனால் நாங்கள் அதை இன்னும் அறிவிக்க விரும்பவில்லை. ஏனென்றால் இது அனைத்தும் அதிகாரப்பூர்வமற்றது.”

“ஆனால் நாங்கள் வெல்ல போகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் … அதிகாரப்பூர்வமற்ற முறையில், நாங்கள் மாநிலத்தை (அரசாங்கத்தை) கைப்பற்றப் போகிறோம்.”

சபா மாநில சட்டமன்றத்தில் ஒரு எளிய பெரும்பான்மையைப் பெற ஜிஆர்எஸ் கூட்டணி 37 இருக்கைகளை எட்டியிருப்பதைக் காட்டும் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் குறித்து ஹம்சாவிடம் கேட்கப்பட்ட போது அவர் இதை தெரிவித்தார்.