சபா தேர்தலில் ஜி.ஆர்.எஸ் வெற்றி!

தேசிய கூட்டணி (பி.என்), பாரிசான் நேசனல் மற்றும் பார்ட்டி பெர்சத்து சபா (பிபிஎஸ்) ஆகியவற்றின் ஒத்துழைப்பை உள்ளடக்கிய சபா மக்கள் கூட்டணி (ஜிஆர்எஸ்)/Gabungan Rakyat Sabah (GRS) சபாவை வாரிசான் கட்சியிடமிருந்து கைப்பற்றியது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின் அடிப்படையில், இரவு 11.45 மணி நிலவரப்படி அக்கூட்டணி 73 மாநில சட்டமன்ற (டி.யூ.என்) இடங்களில் 38 இடங்களை வென்றுள்ளது.

வாரிசான் மற்றும் அதன் கூட்டணி 32 இடங்களை வென்றது, சுநேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களை வென்றனர்.

ஒரு மாநில அரசாங்கத்தை உருவாக்க குறைந்தது 37 இடங்களை வெல்ல வேண்டும்.