முன்னாளில் பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம்க்கு பொதுமன்னிப்பு மற்றும் சிறையில் இருந்து விடுதலை செய்ய பல ஏற்பாடுகளை செய்தும் அன்வர் அவரை ஆதரிக்கவில்லை என டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
“அவர் என்னை ஆதரிப்பதற்கு பதிலாக தனது ஆதரவிற்காகவும் அணி திரட்டவும் ஆட்சியாளர்களையும் வெளிநாட்டினரையும் சந்தித்ததோடு என்னை விமர்சிக்கவும் செய்தார்.” மலேசியா காஸெட்க்கு அவர் அளித்த பேட்டியில் கூறினார்.
இரண்டு தசாப்தங்களாக அரசியல் எதிரிகளாக இருந்த மகாதீர் மற்றும் அன்வர், 2018 பொதுத் தேர்தலில் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான அம்னோ மற்றும் தேசிய முன்னணி கூட்டணியை அதிகாரத்திலிருந்து கவிழ்க்க நம்பிக்கை கூட்டணியில் இணைந்தனர்.
தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் வெற்றியைத் தொடர்ந்து, மகாதீர் கொடுத்த வாக்கின்படி அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, போர்ட் டிக்சனுக்கான பாராளுமன்ற உறுப்பினராக அன்வர் நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார், மகாதீருடனான அவரது உறவு அடுத்தடுத்த திட்டத்தில் பதட்டத்தையே அளித்தது.
பலர் மகாதீர் பதவி விலகுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என நிர்பந்தித்த போது அன்வர் வேண்டாம் என்று ஒப்புக்கொண்டார். ஆனால் , ஷெரட்டன் நகர்வு பிப்ரவரி மாத இறுதியில் நம்பிக்கை கூட்டணியின் சரிவுக்கு வழிவகுத்தது.
1970 களில் கடுமையான இஸ்லாமிய ஆர்வலராக அன்வர் இருந்தபோதிலும் 1982 ஆம் ஆண்டில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி அம்னோவில் இணைத்ததை மகாதீர் நினைவு கூர்ந்தார்.
“ஆனால் அவர் துணைப் பிரதமரானபோது, அவர் என்னைக் கவிழ்க்க முயன்றார்,” அதுதான் அன்வாரின் முறை” என்று அவர் மேலும் கூறினார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மை இருப்பதாக அன்வாரின் சமீபத்திய கூற்று குறித்து, மகாதீர் கடந்த காலத்திலும் இதேபோன்ற கூற்றைக் கேட்டதாகவும், இந்த முறை அவர் வெற்றி பெறுவாரா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்றும் கூறினார்.
இருப்பினும், பிரதமர் முஹைதீன் யாசின் ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும்.
“முஹைதீன் கவிழ்க்கப்படுவது ஒரு விஷயம், அன்வருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா என்ற கேள்வி மற்றொரு விஷயம்” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த செப்டம்பர் 23 அன்று, அன்வர் தனது அரசியல் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக, அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .