இன்று 374 புதிய நேர்வுகள், 3 இறப்புகள்

கோவிட் 19 | இன்று புதிதாக 374 நேர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், மூவர் கோவிட் – 19 பெருந்தொற்றுக்குப் பலியாகி உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதிக நேர்வுகள், அதாவது புதிதாக 277 நேர்வுகளுடன் சபா மாநிலம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. சிலாங்கூர் மாநிலம் நேற்றைய சம்பவங்களைவிட 2 மடங்கு அதிகரித்து, இன்று 44 நேர்வுகளுடன் அடுத்த நிலையிலும் கெடா 27 புதிய நேர்வுகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

மேலும், சரவாக்கில் 9, கோலாலம்பூரில் 4, பினாங்கில் 3, ஜொகூர், பேராக் மற்றும் லாபுவானில் 2, மலாக்கா மற்றும் புத்ராஜெயாவில் 1 என கோவிட்-19 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

343 நேர்வுகள் உள்ளூர்வாசிகள் தொடர்புடையது. 17 நேர்வுகள் சபாவில் இருந்து திரும்பியவர்கள் இடையிலானது. இதன்மூலம், கடந்த 20 செப்டம்பர் தொடங்கி, சபாவில் இருந்து திரும்பியவர்களில் இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 341 உயர்ந்துள்ளது.

இன்று, 73 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும், 3 மரணங்கள் நேர்ந்துள்ளதாகவும் சுகாதாரத் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.