அம்னோவின் 30 எம்.பி.-க்கள் அன்வாரை ஆதரிக்கிறார்களா? அது வெறும் கணிப்பு – கலிட்

30 அம்னோ எம்.பி.-க்கள் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கின்றனர் என்ற தனது அறிக்கை ஒரு கணிப்பு மட்டுமே என்று அமானா தகவல் தொடர்பு இயக்குநர் காலிட் சமாட் கூறினார்.

“30 அம்னோ எம்.பி.க்களின் எண்ணிக்கையை எந்தவொரு கட்சியும் குறிப்பிடவில்லை என்று சிலர் விமர்சித்துள்ளனர்,” என்று தனது அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“இது எனது கணிப்பு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், அதிகாரப்பூர்வமாக எனது அறிக்கையில், ‘பல அம்னோ எம்.பி.க்கள் உட்பட கட்சித் தலைவர்களின் ஆதரவு’ என்று மட்டுமே குறிப்பிட்டிருக்க வேண்டும்”.

“அமானாவைப் பிரதிநிதித்து மாட் சாபு மற்றும் டிஏபி-ஐ பிரதிநிதித்து லிம் குவான் எங் எழுதிய கடிதங்கள் தவிர, 30 அம்னோ எம்.பி.-க்கள் ஆதரவு என்று குறிப்பிடப்பட்ட ஜாஹிட் ஹமீடியின் ஒரு கடிதத்தையும் அன்வார் கொண்டு வந்தார் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.

“ஹமிடியின் கடிதத்தில், பெயர் பட்டியலும் இருந்ததாகக் கூறப்படுகிறது,” என்றார் அவர்.

முன்னதாக, பல அம்னோ எம்.பி.-க்கள் அன்வாரை ஆதரிக்கின்றனர் என்று அதன் தலைவர் ஜாஹிட் ஹமிடி ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.