6 உயிரிழப்புகள், 629 புதிய தொற்றுகள்

கோவிட் -19 : இன்று பிற்பகல் 12 மணி வரையில், மேலும் ஆறு இறப்புகள் மற்றும் 629 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் 99 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்ற வேளை, 31 நோயாளிகளுக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது என்று தினசரி செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இன்று, சபாவில் 489, சிலாங்கூரில் 50, பினாங்கில் 33, லாபுவானில் 19, கோலாலம்பூரில் 10, பேராக்கில் 9, கெடாவில் 7, ஜொகூரில் 5, மலாக்காவில் 3, புத்ராஜெயாவில் 2, நெகிரி செம்பிலான் மற்றும் பஹாங்கில் 1 என தொற்றுகள் பதிவாகியுள்ளன.

245 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், இன்று 6 மரணங்கள் சம்பவித்துள்ளன.