நாட்டில், கோவிட் – 19 தொற்றுகள், தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்து வரும் நிலையில், இன்று மதியம் வரை, 865 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன.
சபாவில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில், 643 புதியத் தொற்றுகள் பதிவாகிய நிலையில், சிலாங்கூரில் 101 மற்றும் லாபுவானில் 34 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இன்று, 455 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் சுகாதாரத் தலைமை இயக்குநர், டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கிடையே, 99 நோயாளிகள் அவசரப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவர்களில் 32 பேருக்குச் சுவாசக் கருவி தேவைப்படுவதாகவும் நூர் ஹிஷாம் மேலும் சொன்னார்.
இன்று, இந்நோயின் காரணமாக 3 மரணங்கள் நேர்ந்துள்ளதாகவும், அவை அனைத்தும் சபாவில் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இன்று பதிவாகியப் புதியத் தொற்றுகள் :- பினாங்கில் 26 , பேராக்கில் 18,
மலாக்காவில் 16, கோலாலம்பூரில் 6, நெகிரி செம்பிலானில் 4, கெடாவில் 3, ஜொகூரில் 2, பஹாங் மற்றும் திரெங்கானுவில் 1.