ஹிஷாமுதீன் : பிரதமர் பதவிவிலக வேண்டுமா? நாங்கள் விவாதிக்கவிருக்கிறோம்

பிரதமர் முஹைதீன் யாசின் முன்வைத்த அவசரகாலப் பிரகடனத் திட்டத்தை, பேரரசர் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டுமா என்பது பற்றி தேசிய முன்னணி (பி.என்.) எம்.பி.க்கள் விவாதிப்பார்கள் என்று ஹிஷாமுதீன் ஹுசைன் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள அம்னோ தலைமையகத்தில் சந்தித்தபோது, வெளியுறவு அமைச்சருமான ஹிஷாமுதீன் இவ்வாறு கூறினார்.

இன்று பிற்பகல் பி.என். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சந்திப்புக் கூட்டம் உள்ளதாகவும் அவர் சொன்னார்.

“நாங்கள் அதைப் பற்றி விவாதிக்கவுள்ளோம். பி.என். எம்.பி.க்களின் நிலைப்பாட்டை நான் அறிய விரும்புகிறேன்,” என்று புதிதாக நியமிக்கப்பட்ட அம்னோ பொருளாளருமான அவர் தெரிவித்தார்.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தை, அம்னோ இன்னும் ஆதரிக்கிறதா என்பது குறித்து கேட்டபோது, “எனக்குத் தெரியாது, அம்னோ கூட்டத்திற்குப் பிறகுதான் எதுவும் தெரியும்,” என அவர் கூறினார்.