சிலாங்கூரில் 2 பகுதிகள், சரவாக்கில் ஒரு பகுதியில் நாளை முதல் பி.கே.பி.டி.

கோவிட் -19 | நாளை தொடக்கம், இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி) சிலாங்கூரில் இரண்டு பகுதிகளிலும், சரவாக்கில் ஒரு பகுதியிலும் செயல்படுத்தப்படும்.

இந்த விவகாரத்தை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

சிலாங்கூர், கோலா லங்காட்டில், சுங்கை எமாஸ் அடுக்குமாடி வீடுகள் மற்றும் உலு லங்காட்டில், பிளாஸா ஹெந்தியான் காஜாங் ஆகிய இடங்களில், நாளை தொடக்கம் நவம்பர் 10 வரையில் இது நடைமுறையில் இருக்கும்.

அதேசமயம், சரவாக், கூச்சிங்கில், கம்போங் ஹாஜி பாக்கி எனும் இடத்தில் நாளை தொடக்கம் நவம்பர் 11 வரை பி.கே.பி.டி. அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி, நாளை முடிவடைய திட்டமிடப்பட்ட ரேமாண்ட் சிறைச்சாலை மற்றும் பினாங்கு சிறைச்சாலை குவார்ட்ரஸ் பி.கே.பி.டி, நவம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.