மாட்சிமை தங்கியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, அவசரகால அறிவிப்பை நிராகரித்ததையடுத்து, பிரதமர் முஹைதீன் யாசின் அப்பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவது பொருத்தமானதல்ல என்று மூத்த பத்திரிகையாளர் ஏ கதிர் ஜாசின் தெரிவித்தார்.
பெர்சத்து உச்ச தலைமைக் குழுவின் (எம்.பி.தி.) முன்னாள் உறுப்பினரான கதிர், 2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு முஹைதீன் முன்னுரிமை அளிக்க வேண்டும், குறிப்பாக, பி.எச். மற்றும் அம்னோ அதைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து.
“அவசரநிலை குறித்து முஹைதீன் தொடர்ந்து பேசுவது, அவர் மிகவும் ‘அவநம்பிக்கை’யில் இருப்பதையேக் காட்டுகிறது, அது பொருத்தமானதல்ல.
“போதும், அகோங் நிராகரித்துவிட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக ஊடகங்களில் எதிர்வினைகளைப் பார்த்தால், பெரும்பான்மையானவர்கள் அவசரகால நிலையை அறிவிக்க ஒப்புக் கொள்ளவில்லை,” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.
பத்து சாபி இடைத்தேர்தல் மற்றும் சரவாக் மாநிலத் தேர்தல் ஆகியவை கோவிட் -19 இன் பரவலை அதிகரிக்கும் என்று கவலை தெரிவித்த முஹைதீன், மேலும் மத்திய அரசியலமைப்பின் 150-வது பிரிவின் கீழ் அவசரகால அறிவிப்பு மட்டுமே அதை தாமதப்படுத்தக்கூடும் என்று நேற்று முஹைதீன் கூறியிருந்தார். அது குறித்து காதீர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இருப்பினும், டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சபா பத்து சாபி இடைத்தேர்தல், முந்தைய சபா மாநிலத் தேர்தலைப் போன்று பெரிதாக ஆபத்தை விளைவிக்காது என கதிர் கூறினார்.
சரவாக் மாநிலத் தேர்தலை, உடனடியாக நடத்த வேண்டிய அவசியமில்லை, ஏனெனில், சரவாக் சட்டமன்றக் காலம் முடிவடைய இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ளன, அதாவது ஆகஸ்ட் 7, 2021.
“அந்த நேரத்தில், கோவிட் -19 பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் அல்லது அதிக கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்று நம்புவோம்,” என்று அவர் கூறினார்.