தேசியக் கூட்டணி (பி.என்.) தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு முந்தைய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, இன்று பிற்பகல், கோலாலம்பூர் ஹில்டன் தங்கும் விடுதியில் ஒன்று கூடியுள்ளனர்.
பிரதமர் முஹைதீன் யாசின் மதியம் 12.20 மணியளவில் விடுதிக்குள் நுழைந்தார். அதற்கு முன்னதாகவே, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இருவரும் வந்து சேர்ந்தனர்.
சபா ஐக்கிய கட்சியின் தலைவர் மாக்சிமஸ் ஓன்கிலி; ம.சீ.ச. தலைவர், வீ கா சியோங்; மற்றும் ம.இ.கா. தலைவர் எஸ். விக்னேஸ்வரன் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ளனர்.
இன்றையக் கூட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில், நாளை தொடங்கவுள்ள மக்களவை கூட்ட அமர்வில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2021 வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
வாக்களிப்பதற்கு முன்னதாக, 221 எம்.பி.க்கள் மத்தியில் இது விவாதிக்கப்படும், அது அங்கீகரிக்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது பின்னர் வாக்கெடுப்பில்தான் தெரியவரும்.
மக்களவையில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன, அவற்றில், அண்மையில் பத்து சாபி பிரதிநிதி லீயூ வுய் கியோங் மரணம் காரணமாக, தற்போது அது காலியாக உள்ளது.
முஹைடின் தலைமையிலான பி.என். அரசாங்கத்திற்கான ஆதரவு, கடந்த மே மாத நிலைமையின் அடிப்படையில் இப்போது மிக மோசமாகவே உள்ளது.
இருப்பினும், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக இந்த நிலை சமீபத்தில் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.