முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, தான் ‘ஒற்றுமை அரசாங்கம்’ அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.
கடந்த வாரம், மகாதீர், பல அரசியல்வாதிகளுடனான சந்திப்புகள் தொடர்பானவை என நம்பப்படும் புகைப்படங்கள் சில வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஃப்ரீ மலேசியா டுடே செய்திகளின் படி, மாட் சாபு என்று பிரபலமாக அறியப்படும், அமானா தலைவர் மொஹமட் சாபு உள்ளிட்ட சில தரப்பினருடன் நடந்த ஒற்றுமை அரசாங்கம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தடுக்க முயற்சிகள் நடந்துள்ளதாக தெரிகிறது.
“விவாதங்கள் எதுவுமில்லை. எங்களால் அதை அவருடன் செய்ய முடியாது. ஒருவர் அதை அனுமதிக்க மாட்டார், மாட் சாபுவுடன் அல்ல, அவரது கட்சியுடன்,” என்று பெர்சத்துவின் முன்னாள் தலைவரான அவர் கூறினார்.
மேலும், அம்னோ தலைமை ஆலோசகர் தெங்கு ரஸாலீ ஹம்சா மற்றும் மாட் சாபுவுடனான தனது சந்திப்புகள், பழைய நண்பர்களிடையே நடந்த ஒரு சாதாரண சந்திப்பு மட்டுமே என்று மகாதீர் முகமது விவரித்தார்.
“கு லி எனது அமைச்சரவையில் இருந்தவர். அவர் என்னைச் சந்திக்க விரும்பினார், என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை.
“மாட் சாபு, அவர் அடிக்கடி வருவார் (என்னைப் பார்க்க). அவர் அரசியலைப் பற்றி என்னிடம் பேச வரலாம்,” என்று லங்காவி எம்.பி.யுமான மகாதீர், நேற்று இரவு அத்தீவில் நடந்த பெஜுவாங் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
அதேபோல், முன்னாள் கோலாலம்பூர் முப்தியும் மத விவகார அமைச்சருமான சுல்கிஃப்லி மொஹமட் அல்-பக்ரி, கோவிட் -19 தொடர்பாக அவர் எழுதிய புத்தகங்களைக் காட்ட வந்ததாக மகாதீர் கூறினார்.
அந்த மூவருடனான தனிதனி சந்திப்புகள், ஶ்ரீ கெம்பங்கானில் உள்ள மகாதீரின் இல்லத்தில் நடைபெற்றதாகவும், ஒற்றுமை அரசாங்கம் அமைப்பது குறித்து விவாதங்கள் நடந்ததாகவும் வட்டாரங்கள் முன்பு மலேசியாகினியிடம் தெரிவித்தன.