நாட்டில், இன்று 957 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, எண்ணிக்கை மீண்டும் 900-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், இன்று அந்நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது, 972 கோவிட் -19 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
644 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது
அவசரப் பிரிவில் 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 27 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. இன்று இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
மேலும் இன்று, 2 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று, உசஹா திரளை – சிலாங்கூர், பெட்டாலிங் & கிள்ளான் மாவட்டங்கள்; மற்றது, தெம்பாகா திரளை – பினாங்கு, தீமோர் லாவுட் & பாராட் டாயா மாவட்டங்கள் ஆகியவையாகும்.
சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 225, பினாங்கில் 23, லாபுவானில் 18, திரெங்கானுவில் 15, சரவாக்கில் 11, நெகிரி செம்பிலானில் 8, பேராக்கில் 5, கோலாலம்பூரில் 4, கெடா, மலாக்கா, புத்ராஜெயா மற்றும் ஜொகூரில் 1.