இவ்வாரம் மக்களவை அமர்வு அரை நாள் மட்டுமே

நாட்டில் கோவிட் -19 தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களவை அமர்வு இன்று முதல் வியாழக்கிழமை வரை அரை நாள் (மதியம் 1 மணி வரையில்) மட்டுமே நடைபெறும்.

ஒத்திவைப்புக்கான முன்மொழிவு, பிரதமர் துறை அமைச்சர் தக்கியுதீன் ஹாசனால், கேள்வி பதில் அமர்வுக்கு முன்னதாக, கூட்டவிதி 12 (1)-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு, வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜுரைதா கமருதீனால் ஆதரிக்கப்பட்டது.

இந்த முன்மொழிவு, பின்னர் பல எம்.பி.க்களிடமிருந்து பல்வேறு எதிர்வினைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் மக்களவை சபாநாயகர் அசார் அஜீசன் ஹருனிடம் நாடாளுமன்றத்தில், கோவிட் – 19 நோய்த்தொற்றுக்கு ஆளான ஊழியர்களின் நிலை குறித்து விளக்குமாறு கேட்டுக் கொண்டனர்.