கோவிட் -19 பெருந்தொற்றைக் கையாள, பெட்ரோனாஸ் மற்றொரு RM10 பில்லியனை அரசாங்கத்திற்கு வழங்கியது

அரசாங்கம், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில், RM10 பில்லியன் கூடுதல் ஈவுத்தொகையை வழங்க பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாரத் தொடக்கத்தில், பொருளாதார அமைச்சர், பெட்ரோனாஸ் RM34 பில்லியன் ஈவுத்தொகையை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளதாகக் கூறினார்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வரும் அந்நிறுவனம், தொடக்கத்தில் RM24 பில்லியன் மட்டுமே செலுத்துவதாக உறுதியளித்தது, கூடுதல் நிதி அதன் இலாபத்தைப் பொறுத்தது என்று கூறி இருந்தது.

தற்போது, வாக்குறுதியளிக்கப்பட்ட ஆரம்பத் தொகையை முழுமையாக செலுத்தியுள்ள பெட்ரோனாஸ், கோவிட் -19 தொற்றுநோயால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் அரசாங்கத்திற்குக் கூடுதல் ஈவுத்தொகை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த ஈவுத்தொகை நவம்பர் இறுதிக்குள் செலுத்தப்படும் என்றும் பெட்ரோனாஸ் கூறியுள்ளது.