கோவிட் 19 : இன்று 1,032 புதியத் தொற்றுகள், 8 இறப்புகள் பதிவு

இன்று மதியம் வரையில், கடந்த 24 மணி நேரக் காலகட்டத்தில், நாட்டில் 1,032 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 8 இறப்புகளும் நேர்ந்துள்ளன. 7 மரணங்கள் சபாவில் பதிவாகியுள்ள நிலையில் பேராக்கில் ஒரு மரணம் நேர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்தது, ஆக, சபாவின் மொத்த இறப்பு எண்ணிக்கை 138.

இன்று 820 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 27 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று, சபா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் புத்ராஜெயாவில் 6 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சபா 646 புதிய நோய்த்தொற்று பதிவுகளுடன், தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழ்கிறது.

சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 231, நெகிரி செம்பிலானில் 44, லாபுவானில் 28, கெடாவில் 25, பினாங்கில் 23, சரவாக்கில் , கோலாலம்பூரில் 7, பேராக்கில் 6, புத்ராஜெயாவில் 3, திரெங்கானுவில் 3, கிளந்தானில் 2 மற்றும் ஜொகூரில் 1.