தற்சமயம் ‘முழு அடைப்பு’ தேவையில்லை – அமைச்சர்

நாடாளுமன்றம் | “முழு அடைப்பு” அல்லது நுழைவு மற்றும் வெளியேறும் தடையை இந்த நேரத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு பொறுப்புகள்) மொஹட் ரெட்ஜுவான் யூசோஃப் தெரிவித்தார்.

மலேசியா தற்போது மீட்பு நிலையில் உள்ளது, மறுசீரமைப்பு இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) மூலம் கிட்டத்தட்ட அனைத்து பொருளாதார மற்றும் சமூகத் துறைகளையும் படிப்படியாக திறக்கபடுவதோடு, செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எச்சரிக்கையாக மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

“செயல்படுத்தப்பட்ட மேலாண்மை பொறிமுறையானது, கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதுடன், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் போன்ற சுகாதார மையங்களின் சுமைகளைக் குறைத்துள்ளது என மக்களவையில் அமைச்சர் தெரிவித்தார்.

கோவிட் -19 பதிவுகள் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் இதுவரை ஏன் நுழைவு மற்றும் வெளியேறும் தடையை நடைமுறைப்படுத்தவில்லை என்ற டாக்டர் ஷாஹிடான் காசிம் (பி.என்-அராவ்) எழுப்பியக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

  • பெர்னாமா