222 எம்.பி.க்களில் 80 பேரை மட்டுமே ஒரு நேரத்தில் மக்களவையில் அமர மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவை தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா ஆதரித்தார்.
மற்ற எம்.பி.க்கள் மாநாட்டில் சுழல்முறையில் கலந்துகொள்ள முடியும், மேலும் அவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்க அனுமதிக்கப்படுவதாகவும் அன்வார் விளக்கினார்.
“இதில் என்ன ஜனநாயகம் பாதிக்கப்படுகிறது? கூட்டமாக இல்லாதபடி, மக்களவையினுள் நுழைய சுழல்முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“பேச விரும்பினால், வாக்களிக்க விரும்பினால், உள்ளே நுழையலாம். வெளியே (அவை) இருக்கும் நேரத்தில், சிசிடிவி வழியாக மாநாட்டைப் பின்பற்றலாம்.
“உள்ளே நுழைய விரும்பினால், நுழையலாம், எப்போதும் நாடாளுமன்ற கட்டிடத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் வலைதளத்தில் வெளியான ஓர் அறிக்கைக்கு பதிலளித்தார். அந்த அறிக்கையில் வழக்கறிஞர் ஒருவர், இந்த விதி ஜனநாயக வரம்பிற்கு அச்சுறுத்தல் என்று கூறியிருந்தார்.
“அவர்களுக்குப் புரியவில்லை. மக்களவையில் 80 (எம்.பி.க்கள்) என்பது ஓர் அறையில் என்பது பொருள்.
மற்றவர்கள் மற்ற அறைகளில் அமர்ந்து இருப்பார்கள், ஆனால் மாநாட்டில் கலந்துகொள்ளலாம். அறையில் சுழல் முறையில் நுழையலாம் … விவாதிக்க விரும்பினால், வாக்களிக்க விரும்பினால், நுழைய முடியும்,” என்று அவர் மீண்டும் கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2021 வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள இன்று முதல் இது அமலுக்கு வருகிறது.
80 எம்.பி.க்களில், அரசாங்கத்தைச் சேர்ந்த 41 பேரும், எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சையைச் சேர்ந்த 39 பேரும் அடங்குவர்.
இருப்பினும், மக்களவை சபாநாயகர் அஸ்ஹர் அஸிஸான் ஹருன் கருத்துப்படி, வாக்கெடுப்பு நடைபெறும்போது, அது செயல்படுத்தப்படாது என்று கூறியுள்ளார்.