நஜிப் : ஜாசா’வுக்கு RM85.5 மில்லியன் நிதி ஏற்றுக்கொள்ள முடியாதது, மக்கள் சினமடைவர்

மக்களவை | முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், சிறப்பு விவகாரங்கள் இலாக்காவை (ஜாசா) மீண்டும் கட்டமைப்பதற்கு, RM85.5 மில்லியனை ஒதுக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.

2021 வரவு செலவுத் திட்டத்தில், தேசியக் கூட்டணி அரசாங்கம் அறிவித்தபடி செய்தால், அது மக்களின் கோபத்திற்கு வித்திடும் என்றார் அவர்.

இன்று, மக்களவையில் 2021 வரவுசெலவு மசோதா விவாத அமர்வில், அந்தப் பெக்கான் எம்.பி. இவ்வாறு சொன்னார்.

“மக்களைக் காப்பாற்ற அதிக ஒதுக்கீடுகள் தேவைப்படும் நெருக்கடி காலம் இது.

“தேசிய முன்னணி அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது, ஜாசா’விற்கு நான்கு மடங்கு அதிக ஒதுக்கீட்டை தேசியக் கூட்டணி அறிமுகப்படுத்துவது, மக்களிடையே கோபத்தை உண்டாக்கும்,” என்று அவர் கூறினார்.