நாட்டில், இன்று நண்பகல் வரையில், 822 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 2 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சபாவில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இரண்டு மரணங்களும் சபாவில் பதிவாகியுள்ளன. 22 மற்றும் 67 வயதுகொண்ட அந்த இரு பெண்மணிகளும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவசரப் பிரிவில் 86 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 30 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று 769 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாக டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார். ஆக, இதுவரையில் 31,073 பேர் இக்கொடுநோயிலிருந்து நலமடைந்துள்ளனர்.
பஹாங் மற்றும் திரெங்கானுவில் புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகாத நிலையில், 259 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது.
சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
நெகிரி செம்பிலானில் 225, சிலாங்கூரில் 178, லாபுவானில் 46, பினாங்கில் 26, கோலாலம்பூரில் 21, கெடாவில் 17, சரவாக்கில் 14, பேராக்கில் 14, ஜொகூரில் 10, மலாக்காவில் 6, புத்ராஜெயாவில் 3, பெர்லிஸில் 2 மற்றும் கிளந்தானில் 1.