பிரதமர் முஹைடின் யாசினின் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம், அவசரகால அறிவிப்பைப் பெறத் தவறியதாலும் “அச்சத்திற்கு இடையில் ஆட்சி” செய்வதாலும், அடுத்த ஆண்டு புதிய ஆணையைப் பெற முயற்சிக்கலாம் என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
எனவே, அந்நேரத்தில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நம்பிக்கைக் கூட்டணி (பி.எச்.) தயாராக இருக்க வேண்டும் என்று லிம் கூறினார்.
“பிடிக்கிறதோ இல்லையோ, நாம் தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் அடுத்த ஆண்டு தேர்தலை நடத்த அரசாங்கம் விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
“அவர்கள் விரும்பிய அவசரகால அறிவிப்பைப் பெறத் தவறிவிட்டார்கள், அச்சத்திற்கூடே ஆட்சி செய்வதால், அடுத்த ஆண்டு தேர்தலை நடந்த அவர்கள் விரும்பலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர், இன்று பிஎஃப்எம் வானொலி நிலையத்தில் “பிரேக்ஃபாஸ்ட் கிரில்” எனும் நிகழ்ச்சியில் கூறினார்.
பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பி.எச். தயாராக உள்ளதா, அல்லது தயார்படுத்திகொண்டு இருக்கிறதா என்று கேட்டபோது லிம் இவ்வாறு கூறினார்.