சுகாதார துணையமைச்சர் : நூர் ஹிஷாம் சிறந்ததொரு முனைமுகப் பணியாளர்

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவைச் சுகாதார துணை அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி தற்காத்து பேசியுள்ளார்.

நாட்டில் கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில், நூர் ஹிஷாமின் நம்பகத்தன்மை மற்றும் தியாகங்களைக் கண்டனம் செய்வது பொறுப்பற்றது மற்றும் நியாயமற்றது என்று நூர் அஸ்மி கூறினார்.

“நாங்கள் முனைமுகப் பணியாளர்களைக் (frontliners) குறிப்பிடுகிறோம் என்றால், டாக்டர் நூர் ஹிஷாம், தற்போது கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போரில் முதலிடத்தில் உள்ளவர் அல்லது முன்னணியில் உள்ளவர்.

“இந்தத் தொற்றுநோய் காலத்தில் மட்டுமல்லாமல், அனைத்து மலேசியர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க அவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை அர்ப்பணித்துள்ளார்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா மற்றும் நூர் ஹிஷாம் உட்பட, அமைச்சில் உள்ள அனைவரும் வைரஸ் பரவலை நிவர்த்தி செய்வதற்கான வழிகளைக் கண்டறிய தினமும் சந்தித்து கலந்துரையாடுகிறோம்.

“அனைத்துத் தரப்பினரும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளனர், சுகாதார தலைமை இயக்குனர் நூர் ஹிஷாம் நிச்சயமாக ஒரு முன்னுதாரணமாக அனைவரையும் வழிநடத்தி வருகிறார்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா