இன்பம் பொங்கும் இந்த இனிய நாள், ஆனந்தம் அனைவருக்கும்  உரியதாகட்டும் – சேவியர் ஜெயக்குமார்

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஊரெங்கும் இன்பம் பொங்கும் இந்த இனிய நாள், போல ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களும்  ஆனந்தகரமான நாளாக மலர வேண்டும்,  ஊரெங்கும் வீசும் இன்ப ஒளி நம் மக்கள் முகத்தில் ஆனந்த ஜோதியாய் பிரகாசிக்க வேண்டும்.

கொடுங்கோன்மையை நரகாசூனாக எண்ணி பழகி விட்ட நாம், கோரோனா என்ற அசூரனும் இருப்பதை இவ்வாண்டு தீபாவளி நமக்கு காட்டிவருகிறது. அதனை எதிர்கொள்ள கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.  நம் சுற்றங்களும் சொந்தங்களும், நண்பர்களும் என்றென்றும் நம்முடன் சுகமாக இருக்க, பெரிய எண்ணிக்கையிலான கூடல்களை தவிற்போம். குடும்பத்தின் மகிழ்ச்சியை பேணுவோம்.

இவ்வாண்டு கோரோனா என்ற  நரகாசூரன் நம்மை ஆட்டிப் படைக்கிறான். நாம் கூடல் இடைவெளியை பேணுவோம், கைசுத்திகரிப்பானைக் கொண்டு கைகளை சுத்தம் செய்து, கோரோனா என்னும் நரகாசூரனை வதம் செய்து விரட்டுவோம். முகக்கவரிழையின்றி வீட்டைவிட்டு வெளியே செல்வதைத் தவிர்போம்.

இதுநாள் வரை நாட்டில் எல்லா இனங்களுடனும், சமயத்தாருடனும் இணைந்தே இன்பகரமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துவரும் நாம், இவ்வாண்டு கூடல்களை தவிர்ப்பதே சிறந்த உபாயமாக கொண்டு தொடர்ந்து அனைவரும்  இன்பமாய் வாழ்ந்திட இறையருள் பெருவோம்.

வாழ்வின் அனைத்து செல்வங்களையும் ஈன்று, நோய் தொற்றிலிருந்து விடுப்பட்டு வாழ்வதே இவாண்டுக்கான சவாலாகக் கொண்டு வாழ அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்துகள்.

டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார், கெஅடிலான் தேசிய உதவித் தலைவர்,கோலாலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர்