கோவிட் 19 : இன்று 1,114 புதியத் தொற்றுகள், 2 மரணங்கள் பதிவு

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,114 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 803 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று, சபாவில் 2 மரணங்கள் பதிவாகியுள்ளன. சபாவில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை இப்போது 168-ஆக உள்ளது, இது நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் (306), 54.9 விழுக்காடு.

திரெங்கானு, பஹாங் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அவசரப் பிரிவில் 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 43 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

391 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது

சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

நெகிரி செம்பிலானில் 371, சிலாங்கூரில் 200, பேராக்கில் 53, பினாங்கில் 34, ஜொகூரில் 15, கோலாலம்பூரில் 13, கெடாவில் 10, லாபுவானில் 8, மலாக்கா 6, கிளந்தானில் 5, சரவாக் மற்றும் புத்ராஜெயாவில் 4.